உள்ளத்தின் உண்மை
உள்ளத்தின் எண்ணங்கள்
வார்த்தைகளாக
வடிவம் பெற்று
உதடுகள் பேசுகின்றன
அந்த பேச்சில்
மெய்யும், பொய்யும்
கலந்திருக்கும் ....!!
உள்ளம் உண்மை
பேசாமல்
உதடுகள் உண்மை
பேசுவதில்லை
சில நேரங்களில்
பல உண்மைகள்
மனிதனின் உள்ளத்தில்
உலகம் அறியாமல்
ஊமையாகவே
இருந்து விடுகிறது,,,!!!
--கோவை சுபா