வாழ்வின் வழி...

காலங்கள் ஓடிடும் வாழ்வது மாறிடும்
காயங்கள் என்றுமே மாறாதே!

தவறெனத் தெரிந்துமே செய்திடும் செயல்களும்
மறுமையில் சொர்கத்தில் சேர்க்காதே!

குறுகிய வாழ்க்கையின் சுகத்தினைக் கண்டதும்
முடிவில்லா வாழ்க்கையை வெறுக்காதே!

வரங்களும் வருமென வாசலை பார்த்திடும்
வாழ்வதை நீயும் வாழாதே!

புண்ணியம் செய்கிறேன் எல்லோரும் பாரென
பெருமைக்கு அடிமையாய் போகாதே!

தீயிலும் கொடியது வார்த்தைகள் தானதை
கோபத்தில் என்றுமே வீசாதே!

பாசமும் பாரமும் ஒன்றென எண்ணி
சொந்தத்தை என்றுமே ஒதுக்காதே!

நல்லதை ஊட்டிடு கெட்டதைப் பூட்டிடு
மனதிற்குள் என்றுமே திறக்காதே!!!

எழுதியவர் : Sahul Hameed (8-Nov-20, 12:32 pm)
சேர்த்தது : HSHameed
Tanglish : vaazhvin vazhi
பார்வை : 121

மேலே