"நட்பு கொள்ள ஆசை"

"நண்பன்"
தேடி வந்து தேவைகளை தீர்ப்பான்,
நாடி வந்து நன்மைகளை சேர்ப்பான்..,
ஓடி வந்து உன் இதயத்தில் ஒட்டிக்கொள்வான்,
அன்பை பாடி வந்து உன்னுள் ஒன்றிகொள்வான்..,
வாட்டியெடுக்கும் உன்னை தனிமை,
உன் தனிமையை உடைப்பதே நண்பனின் பெருமை..,
பிறப்பால் வேறாவான்,
உன் பிறவிக்கே வேராவான்..,
அன்பை அறிமுக படுத்த,
நற்பண்பை ஒருமுக படுத்த,
வாழ்க்கையை உணர,
வாழ்விலே உயர,
எப்படி என்று யோசிப்பதை விடு,
உண்மையான நண்பனுக்காக உன் உயிரையும் கொடு..!
செலவாகிப்போவதே வாழ்வியல் நடப்பு,
அதை செழிப்பாக்குவதே நட்பின் சிறப்பு...!