காதல் தேவதை
அவளின் பல்
பல் அல்ல
ஒவ்வொன்றும் நோபல்
உலகின் மிக அழகிய பூ
அவளின் சிரிப்பு
நீர்த்த குளம் இவளின் கை
பட்டதும் தீர்த்தக்குளம் ஆனது
வானவில்லின் முதுகு
வளைந்ததே பூமியில்
இவள் அழகை காணத்தான்
இவள் ரம்பை ஊர்வசி
மேனகையின் கூட்டுத்தொகை
இவளும் மயில்தான் இவளுக்கு இருந்தால் கூட்டுத் தோ கை
கவிஞர்கள் கொடி என
வர்ணிப்பதாலோ என்னவோ
இவள் முள் ளை தலையில்
வைத்தாலும் முல்லையாய்
மலர்கிறது
கடுந்தவ சாமியார் கூட
இவளைக் கண்ட நொடி முதல்
இவளின் அன்னையே
தனக்கு மாமியார் ஆகவேண்டும்
எனத் தவமிருந்தார்....