வாழ்க பென்னிக்குக்

பிறந்தநாள் வாழ்த்து
வாழ்க பென்னிக்குக்

நேரிசை வெண்பாக்கள்

நாட்டைச் சுரண்டிய வெள்ளைய மன்னர்கள்
கேட்டும் அணைக்கு தவவில்லை -- வீட்டைத்
விலைக்குவிற்று தக்க பெரியார் அணையை
நிலைக்க செலவிட்டார் ஜான்


இருந்தவோர் சொத்துவிற்ற ணைசெப்பம் செய்து
வருத்தியப்பஞ் சம்நீங்கச் செய்தார் -. பருத்துக்
கொழுத்தவர சைமீறி செப்பனிட்டார் ஓங்கிநிற்க
வாழ்த்தும் விழுத்தகைபென் னி

....

எழுதியவர் : பழனிராஜன் (16-Jan-21, 10:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 4994

மேலே