அதுபோலத்தான் மரணமும்

பணம், கௌரவம் வேண்டி
போட்டி போட்டுக் கொண்டு
பெற முயற்சிப்பது,
சுகத்தைத் தராமல்
சோகத்தைத் தந்து விடும்
சில சமயம் உயிரை பறித்து விடும்

நாமே உருவாக்கிக் கொள்ளும்
நமது மன அழுத்தத்துக்கு
போதும் என்ற மனமே—அதனை
போக்கும் மருந்தாகும்,
மன அழுத்தம் அதிகரித்தால்
மரணமும் நேசிக்கும்

கண்ணாடி போன்றது மனம்
கவணமாகக் கையாள வேண்டும்,
இல்லையேல் உடைந்து விடும்,
முயற்சி நம் கையில்
முடிவு நம்மிடமில்லை
மரணத்துக்கும் அதே தான்

எழுதியவர் : கோ. கணபதி. (18-Jan-21, 5:25 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 67

மேலே