மடமை

'தாகூர்' ஆக நினைத்தேன்
துல்யக் கவிதைகளால் உனைப்பாட;
'ஷேக்ஸ்பியர்' ஆக நினைத்தேன் - உன்
சாகச செயல்களை நாடகமாக்க;
'காந்தி' ஆக நினைத்தேன் - என்றும்
கீழ்நிலையில் வாடும் மக்களை மீட்க;
'காரல்மார்க்ஸ்' ஆக நினைத்தேன்
கரடுமுரடற்ற நீதி சமுதாயம் உருவாக;
அரசராய்...
ஆளுநராய்...
அறிஞராய்...
அகப்பிரம்மநாதனாய்...
கருணைநிறை வள்ளலாய்...
காருண்ய பிரபுவாய்...
ஆகி பெயரீட்டும்
ஆசை கொண்டேன்.
ஆனால் நாயகனே!
அத்தனையும் உள்ளடக்கும்
ஆத்ம மூர்த்தியாம் அற்புத
அகிலசக்திநிறை உன்வீட்டிலோர்
சிறு துகள் ஆக எண்ணிட
சிறுவன் நான் மறந்துவிட்டேனே...!
அங்கல்லோ என் மடமையெனை
அப்பட்டமாய்க் காட்டிட்டது...!!!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (7-Mar-21, 12:28 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 41

மேலே