உண்மைக்காதலோ

அங்கங்கள் பேசாமர்ப்பேசினர்;
அணைக்காமல் அணைத்தனர்;
மன்முக்த முத்தங்களால்
மனக்கிண்ணம் நிறைத்தனர்;
மகிமைநிறை உறவெனும்
மாறா அணையா விளக்கதில்
தீரா அன்பெனும் தூயத்தெளிந்த
திவ்யநெய்வார்த்துத் திரும்பினர்.

எழுதியவர் : அமல்.சி.தேவ் (8-Mar-21, 1:09 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 105

மேலே