நாட்டின் எதிர்காலம்

தேர்தல் வருது ....
தேர்தல் வருது ...
மாறுதலை விரும்பும் மக்களே
இந்த தேர்தலை சரியாக
உங்கள் எண்ணம் போல்
அமைத்துக் கொள்ள
அருமையான வாய்ப்பு ...!!

வாக்காள பெருமக்களே
உங்கள் அனைவருக்கும்
வணக்கம் ...!!

உங்களது
பொன்னான வாக்குகள்
கட்சியின் பாகுபாடுயின்றி
நாட்டுக்கு உழைக்கும்
நல்லவர்களை
தேர்வு செய்வதில்
கவனமாக இருக்கட்டும் ..!!

வாக்களிப்பது நமது உரிமை
உங்கள் வாக்குரிமையை
பணத்துக்கு அடகு வைத்துவிட்டு
அடிமைகளாக வாழ வேண்டாம் ..!!

பள்ளிக்கூடத்தில்
படிக்கின்ற காலத்தில்
கரும்பலகையில்
வைக்கப்படும் ...!!

வெள்ளைப் புள்ளிகள் மூலம்
நம் வாழ்க்கையின்
எதிர்காலத்தின்
வெளிச்சம் தெரியும் ..!!

தேர்தல் காலங்களில்
பள்ளிக்கூடத்தில்
நம் கைவிரலில்
வைக்கப்படும் ...!!

கரும்புள்ளிகளில்
நாட்டின் எதிர்காலம்
வெளிச்சத்தை தேடுகிறது ..!!

மக்களே கவனமாக வாக்களித்து
நல்ல ஆட்சி மலர வையுங்கள்
இல்லையென்றால் இருட்டில்
வெளிச்சத்தை காண முடியாது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Mar-21, 12:33 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : naatin yethirkaalam
பார்வை : 135

மேலே