காதல்
உற்றுநோக்கும் உன் கண்ணை
பார்க்க முடியாமல் தவிக்கிறேன்
எங்கே என் கட்டுப்பாட்டை கைவிடுவேனோ என்று
கண்கள் காதல் பேசுமென்றால்
உன் கண்களை மட்டும் காணும் வரம் கேட்பேன்
காதலுக்கு ஆண் மட்டுமா காத்திருக்க வேண்டும்?
நானும் காதல் கொண்டு காத்திருக்கிறேன்
இன்றும் உன் செயல்களால் உன்னால் ஈர்க்கப்பட்டு….