நன்கொடை இது

உன்னால் என்றான் உனக்காக என்றான்
எண்ணங்கள் யாவிலும் நீயென்றான்
அவளும் அவனிடத்தில் நிறைந்து நின்றாள்
அவள் அவன் என்ன மாய கண்ணனோ/
இவன் என்று மனசிற்குள் செல்லமாக ,
உண்மை அன்பு கொண்ட உள்ளங்களில்
உணர்வுகளும் எண்ணங்களும் ஒன்றாயின
ஆனாலும் ஜாதியும் மதமும் வேறு வேறு
இவற்றை உணராத வயதில்
தன்னைத் தாங்கிக் கொள்ள துணை மட்டும்
தேடி நிற்கும் பருவம்
அது இயற்கையின் நன்கொடைதான்
இறைவன் இணைத்திட நினைக்கும் போது
மனிதன் பிரித்திட முடியாது ,முடிவாக
இருவர் குடும்பமும் இணைந்து நின்றே
இணைத்து வைத்தனர் மகிழ்வாக ,
அந்த பிஞ்சு உள்ளங்கள் இரண்டும்
சோலை கிளிகளாய் ...

எழுதியவர் : பாத்திமாமலர் (1-Apr-21, 11:20 am)
பார்வை : 94

மேலே