ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடியல் -ஏப்ரல் 14

*ஒடுக்கப்பட்ட*
*சமூகத்தின் விடியல்-*ஏப்ரல் 14**


மறுக்கப்பட்ட
*கல்வியையும்......*
பறிக்கப்பட்ட
*உரிமைகளையும்.....*
எரிக்கப்பட்ட
*உடைமைகளையும்..*
மீட்டெடுக்க
*ஒடுக்கப்பட்ட*
மக்களின்
*உரிமை குரலாய்* *உதித்திட்ட*
*சூரியனே!!*

எட்டாத
*இமயத்தையும்*
தமது
விசாலமான
அறிவால்
*பகலையும் இரவாக்கி*
*வென்றிட்ட*
*சந்திரனே!!*

*உம்மால்*
*விழித்தது*
இம்மானுட
சமூகம்
என்றால்
அது
*மிகையாகாது!!*

அடியையும்
உதையையும்
அடக்குமுறையையுமே
தமது
வாழ்க்கை
நிலையாக கொண்டு
*இந்துதுவத்தை* எதிர்த்த
மானுட சமூகத்தை,
தம்மால் விளைந்த
*சட்டத்தினால்*
*தவிடு பொடியாக்கி,*
அறியாமையை
அகற்றி.......
அறிவாயுதத்தை
எந்த செய்த
*நவீன*
சமூகத்தை
வடித்த *சிற்பியே!!*

தொழிலாளர்களின்
நலன் காக்க
*பற்பல*
*சட்டங்களையும்,*
*எண்ணிலடங்கா*
*மெகா*
*திட்டங்களையும்,*
வழங்கிய *வள்ளலே!!*

*அடுப்படியே*
தமக்கான
*தலமாக*
எண்ணி
வாழ்ந்திட்ட
பெண்களுக்கு
*சமத்துவமே* சுதந்திரத்திற்கான
வழி
என்பதனை
உணர்வலையாய்
ஊட்டிய *மாவீரனே!!*

தாய்மொழியாய்
*பாலி* யை
கொண்டிருந்தாலும்,
*தமிழை* யே
தேசத்தின்
*முதன்மை மொழி*
என்பதனை
தமது
ஆய்வின் மூலம்
நிருபித்த *தமிழாசானே!!*

தேசத்திற்காக
அரிய
பல
*அலுவலகங்களையும்,*
ஏழை
எளிய
வளிய
மக்களின்
நலன் காக்க
*ஆணையங்களையும்*
தந்திட்ட
ஏழை *பங்காளனே!!*

பாரபட்சமும்
பாகுபாடுமில்லா
மழையின்
வண்ணமான *நீலத்தையும்.......*
வனவிலங்கில்
பெரியதான
*யானையையும்......*
தமது அடையாளங்களாக கொண்ட *அண்ணலே!!*

உதிப்பதும்
மிதிப்பதும்
*அறிவாயுதத்தால்* *மட்டுமே*
*இருக்க வேண்டும்*
என்பதனை
உம்மை
*கற்றதனாலேயே* அறிந்தோம்!!

மனித உயிரை
குடிக்கும்
*சாதியத்திற்கும்*
*மதத்திற்கும்*
சாவு
மணியடிக்கும்
காலம்
வெகு தொலைவில் இல்லை
என்பதனை
உம்மை கற்போர்களாகிய
எங்களால் *நிஜமாக்குவோம்!!*

*நாட்காட்டியில்*
ஆண்டுகளின்
வரிசையில்
*பீம் ஆண்டு*
உதயமாக இந்நன்னாளில்
*சபதமேற்போம்!!*

*வீழ்வது நாமாயினும்,*
*வெல்வது சமத்துவமும்,*
*நவீன சமூகமாகவும்* *இருக்கட்டும்!!*


*வசந்தகுமார் இராமன்,*
*பாப்பிரெட்டிப்பட்டி*....

*@@*14/04/2021***@@

எழுதியவர் : வசந்தகுமார் இராமன் (14-Apr-21, 12:00 am)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
பார்வை : 87

மேலே