விந்தையான உலகம்

இரண்டு விரலில்
ஒன்றை தொடு
என்று சொல்லி

ஒரு விரலை
மட்டும் காட்டி
நம் விருப்பத்தை
கேட்கும்
விந்தையான
உலகம் இது ...!!

கவனமாக இரு மனிதா
இல்லையென்றால்
உன் விரலை வைத்தே
உன் கண்ணை குத்தி
உன் விருப்பத்திற்கு
நீ நடக்க முடியாமல்
உன் கண்களை
குருடாக்கி விடுவார்கள் ...!!

பட்டுக்கோட்டையார்
சொன்னதுபோல்
குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும்
குருட்டு உலகம் இது ...!!
மிக கவனமாக தெரிந்து
நடந்து கொள் மானிடா...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Apr-21, 9:57 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 169

மேலே