உள்ளத்தின் ஓசை
********************************
வானினும் பெரிது உணர்க - நமை
ஈன்றெடுத்தத் தாயெனும் உறவு !
கடலினும் ஆழமது அறிக - ஆருயிர்
அன்னையின் ஈடில்லா அன்பு !
உலகினும் விரிந்துப் பரந்தது - கடமை
உணர்வுள்ள தந்தையின் உள்ளம் !
விண்ணினும் உயரம் பூமியில் - உண்மை
நட்புகளின் நேசமிகு நெஞ்சம் !
விஷத்தினும் கொடியது பூமியில் -தெரிந்தும்
அறிந்தோர் செய்திடும் துரோகம் !
கொலையினும் மாபெரும் குற்றம் - ஒருவர்
செய்நன்றி மறத்தல் வாழ்வில் !
கொள்கை இதுவென கொள்க - என்றும்
மனிதம் புனிதமென மண்ணில் !
பகுத்து அறிதலே வழிமுறை - எதிலும்
வகுத்து வாழ்வதே நடைமுறை !
பழனி குமார்
24.04.2021