நீ லிசாமோனாவோ அவள்இளைய தங்கச்சியோ
முத்தும்முல் லையும்சேர் செம்பவள நற்பேழை
சித்திரம் தீட்டுது புன்னகையாய் செவ்விதழில்
புத்தகம் போல்விரிந்து சொல்லுது பூங்கவிதை
மொத்தத்தில் நீலிசாமோ னா !
முத்தும்முல் லையும்சேர் செம்பவள நற்பேழை
சித்திரம் தீட்டுது புன்னகையாய் - முத்தமிழே
புத்தகம் போல்விரிந்து சொல்லுது பூங்கவிதை
வித்தகி இன்னும் சிரி !
முத்தும்முல் லையும்சேர் செம்பவள நற்பேழை பேரெழிலே
சித்திரம் தீட்டுதடி புன்னகையாய் செவ்விதழில் நீயாரடி
புத்தகம் போல்விரிந்து சொல்லுதடி பூங்கவிதை அழகழகாய்
மொத்தத்தில் நீலிசாமோ னாவோ அவள்இளைய தங்கச்சியோ ?
-----இன்னிசை நேரிசையுடன் கலித்துறையில் தமிழ் லிசாமோனா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
