அம்மா
இருளின் கதகதப்பில் என்னை ஈர்ஐந்து மாதங்கள் சுமந்தவள்!
உடலின் ஒரு பாதியை எனக்கு உயிராய் உடலாய் அளித்தவள்!
புதிதாய் என்னை பூவுலகுக்கு அழைத்து வந்தவள்!
புது புது விசயங்கள் காட்டி இந்த பூமியை புரிய வைத்தவள்!
விரல் பிடித்து நடக்கையில் பலமாய் இருந்தவள்!
விக்கல் வந்தால் அன்போடு ஓடி வந்து நீர் அளித்தவள்!
பசி என்று சொன்னவுடன் பட்டினி இருந்தாலும் எனக்கு சோறு வைப்பவள்!
நிலாவை காட்டி புது புது கதைகள் சொன்னவள்!
பள்ளி பருவத்திலே பாடங்கள் சொல்லி தந்து பாசம் காட்டியவள்!
விடுதியில் இருந்த காலங்களில் விழிகளில் என் ரூபம் வைத்து பார்த்து ரசித்தவள்!
வீட்டுக்கு வரும் வேளையில் வெடை கோழி விருந்து வைத்தவள்!
கருப்பாய் இருந்தாலும் கட்டி தங்கமே என்று கொஞ்சியவள்!
கால் அயர்ந்து வீடு வருகையிலே கை, கால் பிடித்து விடுபவள்!
கண் அயர்ந்து தூங்கையில் தலை கோதி பார்த்தவள்!
காய்ச்சல் வந்து விட்டால் கண்னுக்குள் வைத்து பார்ப்பவள்!
உன் சேலை முந்தானையில் தலை துடைத்து காத்தவள்!
உனக்கு ஈடு, இணை இவ்வுலகில் யாரும் இல்லை!
அம்மா