காதலன் கோபம்

தண்ணீர் இல்லா பாலை வனத்தில்
தாகம் எடுப்பது போல

காலை முடிந்த காய்ந்த வேளையில்
காகம் கரைவது போல

காதலி இல்லா கடற்கரை மணலில்
மோகம் வருவது போல

தித்திப்பு நிறைந்த திருவிழா காலம்
சோகம் தெரிவது போல

பற்றற்ற ஞானி பாதையில் சென்று
பாகம் பிரிப்பது போல

பாசம் தெரிந்ததும் அம்மாவின் வயது
வேகம் எடுப்பது போல

அப்பாவின் அன்பு புரிந்ததும் அவரது
தேகம் மறைவது போல

அன்பு என்மேல் இல்லா உன்னை-வி
வாகம் முடிக்கும் எண்ணம்.

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (26-May-21, 2:24 pm)
Tanglish : kaadhalan kopam
பார்வை : 282

மேலே