தீதிலா திருக்குறள் படியாடா

தீதிலா திருக்குறள் படியாடா
கோதிலா வாழ்வு வாழ
காதில் வாங்கிக் கொள்ளடா
மாதவள் சொன்னாள் மகனுக்கு
----இயல்புப்பா அல்லது ஏதேனும் பாவினத்தில்
அடையாளம் கண்டுகொள்ளவும்
ரசனை உங்கள் சாய்ஸ்
தீதிலா நற்குறள் செல்வா படியாடா
கோதிலா வாழ்வினை வாழ உலகினில்
காதினில் நீவாங்கிக் கொள்ளடா என்மகனே
மாதவள்சொன் னாள்மகனி டம் !
-----இன்னிசை வெண்பா இன எதுகையுடன் ஆன எதுகை
அடி எதுகை தி தி தி த
தீதிலா நற்குறள் செல்வா படியாடா
கோதிலா வாழ்வினை வாழ உலகினில்
காதினில் நீவாங்கிக் கொள்ளடா என்மகனே
மாதினியள் சொல்லின ளே !
-------இன்னிசை வெண்பா ஒரே எதுகையுடன் ஆன
அடி எதுகை தி தி தி தி
தீதிலா நற்குறள் செல்வா படியாடா
கோதிலா மல்வாழ இவ்வுலகில் - வாதிடாதே
காதினில் நீவாங்கிக் கொள்ளடா என்மகனே
மாதினியள் சொல்லின ளே !
-----இப்பொழுது நேரிசை வெண்பா ஒரே அடி எதுகையில்
தீதிலா நற்குறள் செல்வா படியாடா
கோதிலா மல்வாழ இவ்வுலகில் - வாதிடாதே
காதினில் நீவாங்கிக் கொள்ளடா என்மகனே
மாதவள்சொன் னாள்மகனி டம்
------நேரிசை வெண்பா இன அடி எதுகையுடன்