கனவில் ஒரு காட்சி

கனவில் ஒரு காட்சி
மரநிழலில் என்மடியில்
அவள் தூங்குகிறாள்
அவள் துயில் கலையாமல்
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கும் இறைவா
எங்கள் இருவர் துயிலும் கலையாமல் நீ பார்த்துக் கொள்ளவேண்டும்
ஒரு வேளை அவள் துயில் கலைந்து விட்டால்....பரவாயில்லை
துயில் கலைந்து புன்னகைப்பாள் ....ஏதேனும் பேசுவாள்
என் துயில் கலைந்துவிடக் கூடாது !
OK MY LORD ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-21, 10:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kanavil oru kaatchi
பார்வை : 64

மேலே