அம்மா

" அம்மா "

" சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும் 'சுமைதாங்கி' !

அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் ' வாழை '

மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும்
' மிதியடி ' !

இறுதியில் வெறுப்போம் என்று தெரிந்தே ' அமுதூட்டும் பிறவி ' !

இன்றும் பொறுப்போம் என்றாவது சிரிப்போம்,

என நம்பி ஏமாறும் ' விசித்திர துறவி '!

அவள் தான் ' தாய் ' என்னும் அற்புதப் பிறவி !".

----------

எழுதியவர் : (23-Jun-21, 11:12 am)
சேர்த்தது : Lakshya
Tanglish : amma
பார்வை : 296

மேலே