எவ்வாறான சிறுகதைகளைச் சிறுவர்கள் விரும்புகின்றார்கள் அமெரிக்காவில் ஒரு ஆய்வு

சிறுவர்கள் இலகுவான புத்தகங்களை விரும்புவதில்லை.பொதுவாக வளர்ந்த பிள்ளைகள், பெரியவர்கள் என எல்லோருமே சவால்கள் நிறைந்த நூல்களையே விரும்புகிறோம். இது சிறுபிள்ளைகளுக்கும் பொருத்தப்பாடானது. உண்மையில் அனேகமான சிறுவர்கள் உலகம் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய நூல்களை வாசிப்பதையே விரும்புகிறார்கள்.

யானைக்கு ஏன் பெரிய தும்பிக்கை இருக்கிறது? பண்டா என்னும் மிருகம் ஏன் மூங்கிலை மட்டும் உணவாக உண்கின்றன? நீர் ஏன் ஒழிபுகும் தன்மையுடையது? இவ்வாறான வினாக்களுக்கான விடைகளையே அறிய விரும்புகிறார்கள்.

சிறு பிள்ளைகள் சாத்தியப்படக்கூடிய எல்லா வகையான கேள்விகளையும் எழுப்புகிறார்கள்.
அவர்கள் ஆர்வமுடையவர்கள்.அதுமட்டுமன்றி எல்லாச் செயற்பாடுகளுக்குமான விளக்கத்தையே அறிய விரும்புகிறார்கள்.

அமெரிக்க ஆராச்சியாளர்கள் சிறுவர்களின் இவ்வாறான தாகத்தைத் தீர்ப்பதற்கு புத்தகங்கள் உதவுமா? என்ற ஆய்வினை அண்மைக்காலத்தில் மேற்கொண்டார்கள்.
அத்தோடு எந்த வகையான புத்தகங்களைச் சிறுவர்கள் விரும்பி வாசிக்கின்றார்கள்? என்ற ஆய்வும் நடைபெற்றது.

இரு வேறு வகையான படப்புத்தகங்களை வாசித்தார்கள்!

அமெரிக்காவிலிருக்கும் மூன்று வயதிலிருந்து நான்கு வயதுவரையான 50 பிள்ளைகளை இந்த ஆய்வில் ஈடுபடுத்தினார்கள்.

வளர்ந்த ஒருவர் இந்தப் பிள்ளைகளுக்கு இரு வேறு வகையான படப் புத்தகங்களை வாசித்தார்.
இரண்டு புத்தகங்களுமே மிருகங்களைப் பற்றியது. இந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றில் மிருகங்கள் பற்றிய சிறு குறிப்புகள் இருந்தது.

மற்றைய புத்தகத்தில் விலங்குகளைப் பற்றிய உண்மைகள் நிறைந்திருந்தது. அதில் பாம்புகள், வண்டுகள், தங்க மீன்கள், நத்தைகள் போன்றன எதற்காக தமக்கே உரிய முறையில் நடந்துகொள்கின்றன என்பதற்கான விளக்கம் விவரிக்கப்பட்டிருந்தது.

எந்தப் புத்தகத்தைக் குழந்தைகள் அதிகம் விரும்பியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இதே கேள்வியை அந்தக் குழந்தைகளிடம் கேட்டபோது; அவர்கள் விலங்குகள் மற்றும் பூச்சிகள் பற்றிய உண்மைகளை விபரித்துக்கூறிய புத்தகத்தையே அதிகம் விரும்புவதாகக் கூறினார்கள்.

இலகுவான புத்தகங்களை விரும்புவதில்லை

நோர்வேஜிய ஆராச்சியாளர் Åse Marie Ommundsen னும் சிறுவர்கள் மற்றும் இளம் பிள்ளைகள் எவ்வாறான புத்தகங்கள் வாசிப்பதை அதிகம் விரும்புகிறார்கள் என்ற ஆராச்சியை மேற்கொண்டார்.

அவர் கூறும்போது; சிறுவர்கள் இலகுவாக விளங்கக்கூடிய புத்தகங்களை அதிகம் விரும்புவதில்லை என்பதையே ஆய்வுகள் நிரூபிக்கின்றன என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில் “உலகம் உண்மையில் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப்பற்றிய புத்தகங்களையே சிறு பிள்ளைகள் அதிகம் விரும்புகிறார்கள்” என்கிறார்.

படப்புத்தகங்கள் சிறு பிள்ளைகளின் சிந்தனையைத் தூண்டுவதற்கான சவால்கள் நிறைந்ததாகவும் அதே நேரம் அவர்கள் தாமாகச் சிந்தித்து தமது கற்பனையில் காட்சிகளை நிறைவு செய்யக் கூடியதாகவும் அமைந்தால் அவ்வாறான புத்தகங்கள் சிறுவர்களை மகிழ்விக்கும். மாறாக இலகுவான புத்தகங்கள் தெளிவாக இருப்பதால் விரைவில் சிறுவர்களைச் சலிப்படையச் செய்துவிடுகின்றன.



ஆண் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கம் குறைவாகவே இருக்கிறது

நோர்வேஜிய ஆராச்சியாளரின் கருத்துப்படி; சிறுவர்கள் எவ்வகையான புத்தகங்களை வாசிக்க விரும்புகிறார்கள் என்பதைப்பற்றிய ஆராச்சி முக்கியமானதொன்று.
ஏனெனில் நாம் இதைக் கண்டுபிடித்துவிட்டால் சிறுவர்களின் வாசிப்பு ஆற்றல் மற்றும் கற்கும் திறன் விருத்தியடைவதற்கும் இது உதவியாக இருக்கும்.

குறிப்பாக ஆண் பிள்ளைகள் புத்தகங்களை விரும்பி வாசிப்பது குறைவாகவே இருக்கிறது. இது பல ஆராச்சியாளர்களாலும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விடயமாகும். ஆனாலும் அவர்கள் விரும்பி வாசிப்பது அறிவுறுத்தல் குறிப்புகள் ( instructions), தொழில்நுட்ப வார இதழ்கள் (technical week magazines) மற்றும் வேடிக்கையான வரிகள் ( funny lyrics) என்பனவாகும். இதைவிட திரையில் ( screen) வாசிப்பதையும் அதிகம் விரும்புகிறார்கள்.

இருபாலார் சிறுவர்களுக்கும் வாசிப்புத்திறனில் ஈடுபாட்டைக் காட்டக்கூடிய நூல்களை உருவாக்குவது மிக முக்கியமான விடயம் என்கிறார் Åse Marie Ommundsen .

- யோகராணி கணேசன்
நோர்வே

எழுதியவர் : யோகராணி கணேசன் (23-Jun-21, 5:27 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 94

மேலே