விகட கவியாய் திரைப்பட நடிகன்

விகட கவியாய் திரைப்பட நடிகன்
நூல் கட்டிய பொம்மையாய் விரும்பிகள்
இலவு காத்த கிளியென நடிகன் சொல்லுக்கு
அரசியலில் ஈடுபட விரும்பிகள் ஆர்வமாய்
பழுக்கும் முன்னே வெம்பிய காயாய்
நடிகன் நோய்ப்பட எல்லாமும் விவகாரமாய்
அவனின் திரைப்பட வசனம் அவனுக்கே
அழகாய் பொருத்தமாய் பொருந்தியது - நிற்கவே
வக்கில்லையாம் ஒன்பது பொண்டாட்டி வேணுமாம்
என்பதைப்போல் தன்னுடலே தானாய் தள்ளாடுதாம்
இவரு தமிழ்நாட்டை மாற்றிடுவாராம்
தமிழ்நாட்டின் நிலைமையோ தாறுமாறாய் - இது
எவரின் கையிலும் உருமாறும் களிமண்ணாய்
மூத்தக்குடி ஆழத்தை உணராததால்
குழி விழுந்த வேழமாய் மாறுவோம் மாற்றுவோம்.
------நன்னாடன்.