மலர்விழியாள் அவள்

பூத்துக்குலுங்கும் குண்டு மல்லிப்பூக்க கண்டேன்
பூத்திருக்கும் மலரின்மேல் மொய்க்கும் கருவண்டொன்றைக்
கண்டேன் எதிரே என்னவளைக் கண்டேன் அவள் கண்களை
மலரொத்த அவள் விழியில் கருமணிகள் ....
அவை இங்குமங்கும் தேடுவது யாதோ
புரிந்துவிட்டது மல்லியில் மதுவைத்த தேடும்
கருவண்டுபோல் அவள் கண்கள்....அக்கருமணிகள்
தேடுவது மதுவாம் என்னை அல்லவா
மலர் விழியே நீயே சொல்வாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jul-21, 1:21 pm)
பார்வை : 263

மேலே