காதலரில்லா மாலை
காதலரில்லா மாலை
நேரிசை வெண்பா
முன்கருக்கல் மாலை குழலூதி ஆவுடன்
சென்றது காதில் இனித்தது -- நன்றாம்
அருகிலவ ரில்லா குழலினிமை நீங்கி
பெரும்படை யென்றதழல் இன்று
முன்பெல்லாம் இனிதாக ஒலித்த இட்டையனின் புல்லாங்குழல் இப்பொழுது
தீப்போல சுடும் மாலைப் பொழுதிற்கு தோதாக வந்து துன்புறுத்தும் படைக்கலமும்
ஆயிற்று.
காமத்துப்பால். குறள்.