கண்ணியம்

கழனி காட்டில்
காரிருள் வேளையில்
வரப்பை தள்ளி
வரம்பு மீறாமை
கண்ணியம்!

கல்வி கூடத்தில்
காம கள்ளி
முளைக்காமை
கண்ணியம்!

கடவுள் கருவறைகள்
காதல் கற்பிக்காமை
கண்ணியம்!

ஆற்று மணலை
விற்றுத் தீர்த்து
வீரவசனம் பேசாமை
கண்ணியம்!!

உற்ற மனைவியை
மாற்றார் முன்
உதாசீனப் படுத்தாமை
கண்ணியம்!!

வாங்கும் சம்பளத்திற்கு
உறங்காமல்
வேளை செய்வது
கண்ணியம்!!

தேர்வு அறையில்
காப்பி அடிக்காமை
கண்ணியம்!

தொகுதி மேம்பாட்டு
நிதியில்
தன் நிதி பெருக்காமை
கண்ணியம்!!

கல்லியாணம் என்ற
பெயரில்
வரதட்சனை வியாபாரம்
செய்யாமை
கண்ணியம்!!

வயிற்று பிழைப்புக்காக
உழைக்க வந்தவளை
உறவுக்கு அழைக்காமை
கண்ணியம்!!

கட்டுப்பாடின்றி
ஒட்டுத்துணியோடு
உடம்பை காட்டாமை
கண்ணியம்!!

வல்வில் சொல்லெடுத்து
வதைக்காமல்
எதிரிடமும்
நல்சொல்லால் நனிபழகல்
கண்ணியம்!!

எழுதியவர் : புஷ்பா குமார் (8-Aug-21, 12:16 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 170

மேலே