என்ன கறி இன்று

என்ன கறி இன்று.**

பத்தடி பத்தடி தோட்டத்தில்,
பாகற்காய் இரண்டு
தொங்குது,
பழுப்பதற்கு முன்பே
பறித்திடுவேன்.

அதற்கு அருகே நட்டிருந்த
கத்தரிக்காய் செடியிலே,
கத்தரிக்காயும் சேர்த்தே
நான்கு அறுத்திடுவேன்.

அக்கம் பக்கத்தாரை
மறக்கமால்,
பார்வதி அக்காவிற்கு ஒரு பாகற்காயும்,
கண் பட்டு இடுமே என
கண்ணிக்கு இரண்டு,
கத்தரிக்காயும் கொடுத்து

எஞ்சியதை,
எண்ணெய் சட்டியில்
எண்ணெய் வார்த்து,
பாகற்காய் கத்தரிக்காய்
வதக்கி மசாலாவும்,
சேர்த்தேனென்றால்!
ஆகிடுமே கறி ஒன்று,
இது எனக்கு ஒரு பெரிய
வேலையில்லை.

பள்ளியில் இருந்து வந்த
பையனதைச் சாப்பிட்டே,
ஏன் அம்மா கறி இன்று
அப்படி சுவைக்குது என்ன!
அதெல்லாம் பத்தடி பத்தடி
அளித்த வரமென்பேன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

** "பத்தடியும் காசும்" என்ற
கவிதையையும் சேர்த்தே படித்தால் இன்று சமைத்த கறி இன்னும் சுவையாக இருக்கும் என நம்புகிறேன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (2-Sep-21, 5:52 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 58

மேலே