மாமல்லபுரம் முதல் சிறிலங்கா வரை

மாமல்லபுரம் முதல் ⏩⏩ சிறிலங்கா வரை

மாமல்லபுரம் சென்றிருந்தேன் - அங்கு
நம்மன்னர்கள் விதைத்த
கற்கோவில்கள் கண்டு களித்து வந்தேன்.

ஐங்கவாட் * சென்றிருந்தேன் - அங்கும்
நம்மன்னர்கள்
விதைத்திருந்த
கற்கோவில்கள் கண்டு வியந்து நின்றேன்.

காஞ்சிபுரம் சென்றிருந்தேன்
-அங்கு
நம்மன்னர்கள் கட்டிய
கோவில்கள் கண்டு களித்து வந்தேன்.

சியாம் நகரம்* சென்றிருந்தேன் - அங்கும்
நம்மன்னர்கள் கட்டிய ராமர்
கோவில் கண்டு
வியந்து நின்றேன்.

தஞ்சாவூர் சென்றிருந்தேன் - -அங்கு
நம்மன்னர்கள் எழுப்பிய
சிவன் கோயில் கண்டு களித்து வந்தேன்..

சிறிலங்கா சென்றிருந்தேன்
அங்கும்
நம்மன்னர்கள் நாற்திசையும்* எழுப்பிய
சிவன் கோவில்கள் கண்டு
அங்கேயே தங்கி விட்டேன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

*ஐங்கவாட் (Cambodia)
*சியாம் (Thailand)
* சிறிலங்கா ##
வடக்கில் (யாழ்ப்பாணம்) நகுலேஸ்வரன்,
கிழக்கில்(திருகோணமலை) கோணேஸ்வரன். மேற்கில்(மன்னார்) கேதிஸ்வரன்,
தெற்கில் (காலி)
தொண்டேஸ்வரன்,
நடுவில் (சிலாபம்)
முனீஸ்வரன்.
## If you are interested in reading more about the five Sivan temples please search under "Pancha Ishwarams" under Wikipedia.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (5-Sep-21, 1:28 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 31

மேலே