சோம்பேறியும் உழைப்பவனும்

சோம்பேறியும்
உழைப்பவனும்.

காட்டில் கிடைக்கும்
புதையல்,
காசியில் காண்பேன்
கடவுள்,
காடும் காசியும் இருக்கையில்,
கவலை இல்லை
எனக்கு,
சொல்பவன்
சோம்பேறி.

காட்டில் புதையலும்
இல்லை,
காசியில் கடவுளும்
இல்லை,
உழைப்பில் புதையல் உண்டு,
உள்ளத்தில் கடவுள்
உண்டு,
சொல்பவன்
உழைப்பவன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (10-Sep-21, 11:21 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 34

மேலே