எனக்கு 9 பிள்ளைகள்

எனக்கு 9 பிள்ளைகள்.

மனைவி பெற்றாள்
மூன்று ,
நான் வளர்த்தேன்
ஆறு,
அவள் இட்டதோ 3பெயர்
அன்பன், அரசன் ,அழகி,
நான் இட்டதோ 1 பெயர் !
தென்னம் பிள்ளை,
.................,. ................,
................, ...................,
தென்னம் பிள்ளை,

அவள் பெற்ற மூன்றும்
நம்மருகே இல்லை,
ஔவை மொழி *
பொய்யாது என,
நான் வளர்த்த ஆறும்
நம்மருகே இருந்து,
சோறு போடுது நமக்கு.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.
*.......தானுண்ட நீரை தலையாலே தான் ....

எழுதியவர் : சண்டியூர் பாலன் (13-Sep-21, 7:59 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 48

மேலே