இன்று யாருடைய பிறந்த நாள்

பிறப்பு 15.7..1891
இறப்பு 26.5.1934


செண்பகராமன் பிள்ளை

நேரிசை வெண்பாக்களால்

இந்திய தேச விடுதலை தாரக
மந்திரம் ஜெய்ஹிந்த் அறிவோம்நாம் --- இந்த
உலகறியும் வார்த்தை முதன்முதலில் சொல்லி
கலக்கியவர் செண்பகரா மன்


குறள் வெண்பா

தமிழனெனி னும்ஜெய்ஹிந்த் கண்டமா வீரன்
தமிழ்பார தம்ஒன்றென் றான்


இந்திய சுதந்திர விடுதலை வீரர்களின் மந்திரச் சொல் ஜெய்ஹிந்த்
வெளிநாட்டுக்கு துதிப்பாடிய திராவிட கம்யூனிஸ்ட் காரன்தவிற
எல்லா இந்திய அரசியல் கட்சிகளுக்கும்பிடித்த ரசித்த சொல்
ஜெய் ஹிந்த். இந்த வார்த்தை இந்தியாவின் வெளியிலிருந்து
வெள்ளையனுக்கு எதிராக படை திரட்டிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நடத்திய படைகளுக்கு எழுச்சி யூட்ட கூடிய மந்திராக் சொல்லைக்
கண்டுபிடித்து நேதாஜிக்கு சொல்லி அவர் படைகளுக்கு சொல்ல வைத்தவர்தான இந்த செண்பகராமன்.இவர் ஆப் கன் நாட்டில்
வெள்ளையனுக்கு எதிராய் ப்படை திரட்டியத் தமிழன்

ஜெய்ஹிந்த்தை ஞாபகம் வைத்துள்ள இந்தியர் அந்த சொல்லை உண்டாக்கியத்
தமிழன் செண்பக ராமனை ஏனோ மறந்து விட்டாகள். நான் காங்கிரஸ்
காரர்களைச் சொன்னேன். வாழ்க செண்பகராமன் பிள்ளை இப்பவும்
அந்த பிள்ளை பட்டம் நீக்குவது குறித்துதான் யோசிப்பார்களே யொழிய
பாராட்ட மாட்டார்கள். சுயநல வாதிகள்.




குறள் வெண்பா

வீரனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கூறி மகிழ்வோம் தொழுது


பழனி ராஜன்

எழுதியவர் : பழனி ராஜன் (15-Sep-21, 3:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 172

மேலே