கந்தையா மாஸ்டர் பாகம் 2

கந்தையா மாஸ்டர்.
(பாகம் 2)

வீடு திரும்பி.......

கனவு கலைந்த கந்தையர்,
காலை கெந்திக் கொண்டு வீடு வர,
கற்பகமும் கண்களால்
சிரித்துக் கொண்டே,
கணவனை அன்புடன்,
அணைத்துச் சென்றாள்.

கடைசியாக,
காலங்கள் கரைந்தோட
கந்தையர் வயதாகி,
கட்டிலிலே படுத்திருந்து,
"கண்ணகி கற்புக்கரசி
என் கற்பகம் அன்புக்கரசி"
என்றே,
காலத்தைக் கழித்திருக்க,
கற்பகம் அருகில் இருக்க,
காலனவன் அவரை அழைத்துச் சென்றான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (20-Sep-21, 12:52 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 35

மேலே