யாரோ எனக்கு நீ
சில நேரங்களில் நீ
என்னை தாலாட்டும் தாயாக
தலை கோதும் அக்காளாய்
கை தாங்கும் தமையனாய்
சண்டை இடும் தங்கையாய்
வாடும் போது வலி போக்கும் குழந்தையாய்
வாழ்வின் வழி அறியாத போது
வாழ்க்கை துணைவியாய்
என் வாழ்வில் எல்லாவுமாய்
எல்லையை கடந்து விரிந்து நிற்கிறாய்
நீ யாரோ எனக்கு