பேதைக்கு உரைத்தாலுந் தோன்றாது உணர்வு – நல்வழி 35

நேரிசை வெண்பா

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்(கு)
உரைத்தாலுந் தோன்றா(து) உணர்வு. 35

- நல்வழி

பொருளுரை:

பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு; அதுபோல, மனிதர்களுள்ளும், ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு;

தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்து) உண்டாகாது..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Sep-21, 12:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 86

சிறந்த கட்டுரைகள்

மேலே