தோல்வி என்பது மறக்கும்

உற்சாகத்தின்
உச்சத்தில்
இருந்தால்
விண்ணில்
ஒளிரும்
அழகிய
நிலவும்
தொட்டிடும்
தூரமாகத்
தெரியும்
எட்டிப்
பிடிக்க
ஆவலும்
தோன்றும் !

விரக்தியின்
விளிம்பில்
இருந்தால்
ஓரடியில்
நிற்கும்
ஒற்றை
மனிதனும்
ஓராயிரம்
பிம்மங்களாக
தோன்றும்
அச்சமும்
ஆழ்மனதில்
எழும் !

உள்ளத்தில்
வலிமையும்
நெஞ்சில்
துணிவும்
இருந்தால்
எரிமலையும்
பனிமலையாக
தெரியும்
இமயமும்
குன்றாக
தோன்றும் !

உள்ளத்தில்
உரமிருந்தால்
வருத்தத்தின்
நெருடல்
வசந்தத்தின்
வருடலாக
தோன்றும்
வலிதரும்
பிணியும்
நொடியில்
நீங்கும் !

எதையும்
தாங்கும்
இதயம்
இருந்தால்
புயற்காற்றும்
இயற்கையின்
புன்னகையாக
தோன்றும்
முட்பாதையும்
பட்டுமெத்தையாக
தெரியும் !

எதிர்நீச்சலிட
பழகிவிட்டால்
எதிர்த்துப்
போராடுபவர்
எவராயினும்
தனித்தேப்
போராட
மனவலிமை
பிறக்கும்
தோல்வி
என்பதே
மறக்கும் !

சிந்தனை
தெளிவானால்
சீர்மிகு
எண்ணங்கள்
மேலோங்கும்
அநீதிகளை
அழித்து
நீதியை
நிலைநாட்டும்
சிந்தை
குளிர்ந்து
வித்தைகள்
புரிந்திட
வீரியம்
கூடிடும் !


பழனி குமார்


( நான் படுக்கையில் இருந்தாலும் ,
பகிர்ந்திடும் எண்ணத்தை பதிவு
செய்வதில் ஆர்வம் குறையவில்லை )

எழுதியவர் : பழனி குமார் (22-Sep-21, 2:38 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 100

மேலே