அரசியலும் அரையாடை அண்ணல் காந்தியும்

நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன
நூதன சபதம் எடுத்து
நூற்று சாதித்த நீ
நுண்ணறிவால் நொடிப்பொழுதில்
வியக்கத்தகு விந்தை செய்தாய் அன்று

வறுமையில் வாடி
அரையாடை உடுத்தும் அபலத்தைக்கண்டு
அசிங்கம் என்று அநாகரீக கூட்டம் என்றோ
பாராமுகமாய் போகாது
பாரோர் மெச்சும் படி
அரசியல் சரித்திரத்தில்
அரை உடம்புக்கு ஆடையை கட்டி
அசூர சாதனையும்
அதிசய சகாப்தத்தையும் படைத்தாய்

சகமனிதர்களில் ஒன்றாய் மாறினாய்
ஜனரஞ்சக தலைவன் என்பதையும் அடையாளம் காட்டினாய்;

பிரஜைகள் பிழைப்புக்கும் சோத்துக்கும் வாடும் போது
பிடிவாதத்தோடு படோடமாய் வாழும் தலைவர்களுக்கு மத்தியில்
எளிமையாய் வாழ்ந்து காட்டிய மகான் நீ

படாடோபம் கூடாது என்ற உன் கொள்கை
காந்தியத்தின் கண்ணியத்தைக் காட்டுகின்றது
உனது வருகையால்
அன்று (21.09.1921)
நான் மாடக்கூட மதுரை பெறுமை பெற்றது
அரை ஆடையே இனி உடுத்துவேன் என்று
அங்கு
மக்களின் ஏழ்மையைக்கண்டு
நீ எடுத்த சபதம் அது

வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற தலைவன் நீ
வழிகாட்டி நீ

ஆட்டிப்படைக்கலாம், பொது சொத்தை
ஆட்டையைப்போடலாம், சூறையாடலாம், அள்ளி எடுத்து செல்லலாம் என்பவர்களுக்கு மத்தியில்
ஏழையின் பங்காலன் நீ

எளிமையாக வாழ்ந்து காட்டிய
அண்ணலைப்போன்று
இன்னும் ஒர் காந்தி மகானை
எங்கு தேடுவோம்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (22-Sep-21, 11:33 am)
பார்வை : 54

மேலே