Butterfly lovers

The Butterfly 💘Lovers
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

(இது சினிமா விமர்சனம் அல்ல..)

கதைக்குள் போவதற்கு முன்,
Tales - இந்த சொல்லை நிறைய முறை கேள்விப்பட்டிருப்பீர்கள்.... ஆனால் பாதி பேருக்கு இதன் பொருள் தெரியாது...

tales = கதை.

butterfly lovers என்பது சீன நாட்டுப்புற கதை.. (Chinese folk-tales)

நம்ம ஊரு, "பாட்டி. வடை சுட்ட கதை" நாட்டுப்புற கதைதான்.
அதாவது, ஏட்டில் பதியாமல் வழிவழியாக செவி வழியாக கேட்ட கதைகள் தான் இந்த folk tales.

ஆனால், ஒரு காதல் கதையை சொல்லி வந்திருக்கிறார்கள்.... அதுவும் அருமையான காதல் கதை...

கதையின் இறுதியில் கொஞ்சம் புருடா விடுவார்கள்... நம்பத்தான் வேண்டியிருக்கிறது... (நம்ம ஊர்ல, நிலாவுல பாட்டி வடை சுடுதுன்னு சொன்னா மட்டும் நம்புவீங்க... இத நம்ப மாட்டீங்களா...?).

கதை:

எட்டு ஆண் குழந்தைக்கு பின் ஒன்பதாவதாக பிறந்த ஷு இங்டாய் (Zhu yingtai) என்ற பெண் ஒரு பணக்கார குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு...

இக்கதை,  3ம் நூற்றாண்டுகளில் நடந்ததாக நம்பப்படுகின்றது.

அந்த காலத்தில், பெண்கள் கல்வி கற்பதையும், வெளியே செல்வதையும் சீன மக்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், ஷூ இங்டாய், தனது பெற்றோரை சமாதானப் படுத்தி, ஆண் உருவம் தரித்து, கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு கல்லூரியில்,
சேர்ந்து விடுகிறாள்....!

(ஊர்களின் பெயர்கள், என்னவோ கெட்ட வார்த்தைகள் போல இருப்பதால், அவற்றை விட்டு விடலாம்....!)

அடுத்த நாள் கல்லூரி விடுதிக்கு, ரயிலில் போகும் போது,
ஓர் இளைஞனை சந்திக்கிறாள் ஷூ.
அவன் பெயர் லியாங் சன்போ(Liang shanbo).

அவனும் அதே கல்லூரியில் அவளுடன் அடுத்த மூன்று ஆண்டுகள் படிக்கப் போகிறான் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறாள்...

மறந்து விடாதீர்கள், ஷூ இப்போது ஆண் வேடத்தில் இருக்கிறாள். நாளடைவில் அவன் மீது காதல் கொள்கிறாள் ஷூ.
ஆனால் அவள் ஆண் வேடத்தில் இருக்கிறாளே....
ஷூ, தன்னுடைய பெண்மையை, அவனுக்கு உணர்த்த எவ்வளவோ முயன்றும், தோல்வி தான் அடைகிறாள்.

திடீரென ஒருநாள்,
"ஷூ... நீ உடனே புறப்பட்டு வீட்டிற்கு வரவும்", என அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. உடனே கிளம்பிப் போவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை...

கூடவே லியாங்கும் செல்ல நேரிடுகிறது.... 18 கி.மி ரயில் பயணம்.... ஷூ, அவனுக்கு நிறைய குறிப்புகள் தருகிறாள், அவள் ஒரு பெண் என்பதை உணர்த்த..

ஆனால் இந்த மாங்கா மடையன் லியாங், எதையும் புரிந்துகொள்ளவில்லை என்பதோடு, சிறு சந்தேகம் கூட படவில்லை.

இறுதியில், ஷூ,
"என் சகோதரியை திருமணம் செய்து கொள். நான் அதற்கு உதவி செய்கின்றன்" என தந்திரமாகப் பேசுகிறாள்.

அவன் கடைசி வரைக்கும் புரிந்துகொள்ளவே இல்லை. எனவே "நீ மறுபடியும் என் வீட்டுக்கு வா" அப்போதுதான் எனது சகோதரியை உனக்கு மணமுடிக்க என் பெற்றோரிடம் பேச முடியும்" என சொல்லி விட்டு பிரிகிறாள்.

ஒரு மாதம் கழித்து, லியாங், ஷூ வீட்டிற்கு செல்கிறான்.அப்போதுதான் ஷூ ஒரு ஆண் அல்ல... அவள் ஒரு பெண் என்பதை உணர்கிறான்.
அந்த ஒரு நொடி முதலே இருவர் மனதிலும் ஓர் இனம்புரியாத பாசப்பிணைப்பு ஏற்பட்டுவிடுகிறது.


லியாங்கிற்கு, நகரத்தில் நல்ல வேலை கிடைக்கிறது.
ஆனால் விதி....?.

ஷூவின் தந்தை அவளுக்கு,  உள்ளூர் பெரும் வணிகர் ஒருவரின் மகனை பேசி முடிக்கிறார்.

இந்த செய்தியை அறிந்த லியாங் உணவின்றி, தூக்கமின்றி மெலிந்து நோய்வாய்ப் படுகிறான்.

ஒரு கட்டத்தில் லியாங் இறந்து விட, இங்கே ஷூவிற்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.
திருமணத்தன்று, ஒரு பலத்த புயல் காற்று, அவர்களின் திருமணம் நடக்க விடாமல் செய்கிறது.

உடனே ஷூ, லியாங்கின் கல்லறைக்கு சென்று, அவனிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று, அவன் கல்லறைக்கு வருகிறாள்.

அவன் கல்லறைக்கு முன்பு அமர்ந்து, ஓவென கதறி அழுகிறாள் ஷூ... "கடவுளே, நான் மீண்டும் எப்படியாவது லியாங்கை பார்த்துவிட வேண்டும் என்று கெஞ்சுகிறாள். அவளின் கதறலுக்கு மனமிரங்குகிறார் கடவுள்.

திடீரென, ஒரு பலத்த இடி சத்தத்துடன் கல்லறை திறக்கிறது. உடனே, கொஞ்சமும் யோசிக்காமல், அந்தக் கல்லறையின் உள்ளே பாய்ந்து விடுகிறாள், ஷூ.

கல்லறை மீண்டும் மூடிக்கொள்கிறது.

அந்தக் காதலர்கள் இருவரும், பட்டாம்பூச்சியாக மாறி, உடனே வெளியேவந்து விடுகின்றனர். பின்பு எப்போதும் அவர்கள் பிரியவே இல்லையாம்.

-முற்றும்

கதையின் முடிவை, மட்டும் விட்டு விட்டால் எல்லாமே எதார்த்தம் தான்.

என்னதான்,, இது திரைப்பட விமர்சனம் இல்லை என்று சொன்னாலும், இக்கதையை 2007-இல் படமாக எடுத்திருக்கின்றனர். படம் அவ்வளவாக போகவில்லை. பின்பு 2018 இது ஒரு டிவி சீரியலாக 30  எபிசோடுகள் ஒளிபரப்பாகின. அது ஹிட் ஆகியது... எப்போதுமே, நம்மாளுங்களுக்கு  மட்டுமில்லை... எல்லோருக்குமே சீரியல்தான் பிடிக்கும் போல...

சீரியலில் இன்னொரு சூப்பர் ரீல் விடுறாங்க பாருங்க... அப்படியே ஷாக்க்க் ஆகிட்டேன்....

இந்த சம்பவத்தினால் தான், எந்த பட்டாம்பூச்சியும் தனியாக பறப்பதே இல்லையாம்.... அதிக பட்சம் 10,20 அடி தூரம் ஒரு பட்டாம்பூச்சி பிரிந்து செல்லுமாம். மற்றபடி பட்டாம்பூச்சி தன் துணையுடன் கூட்டமாகவே சுற்றித் திரியுமாம்.....!

(30 எபிசோடுமே யூட்யூபில் கிடைக்கிறது. ஆங்கில சப் டைட்டில் படித்துக்கொண்டே படம் பார்க்க உங்களுக்கு தெரிந்திருந்தால், தாராளமாக அனுபவிக்கலாம்...)

காதலில்
சில விஷயங்கள்
கிறுக்குத்தனமாகத்
தெரியலாம்....!.
ஆனால்
அந்த
கிறுக்குத்தனங்களே
காதலாகி விடுகிறது...!!!

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (28-Sep-21, 5:19 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 181

மேலே