இணைய வேண்டும்
இணைய வேண்டும்.
இறைவனுடன்
இணைய வேண்டும் என,
எண்ணாத மனமுண்டோ ?
இல்லை எனில் அவன்
ஒரு பொய்யனன்றோ !
காலம் வரும்
அவனுக்கும்,
காடு மேடு ஏறிடுவான்,
கடவுளைத் தேடி
அலைந்திடுவான்.
அவன் கிடந்தான்
வாருங்கள்,
அப்பன் அழைக்கிறான்
எங்களை,
இணைந்திடுவோம் வாருங்கள்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.