காதலியின் வெண்டை விரல் நகமெலாம் செம் பவழக்கல் லாம்
நேரிசை வெண்பா
அப்பரி மீதமர்ந்த யான்சென்ற வவ்வமயம்
உப்பரிகை முன்பக்கத் தொங்கலில் -- துப்புவான்
கார்முகிலைக் கோதும் பவழக்கை யான்கூந்தல்
பார்த்துவியந் தேநானு மன்று
ஆசிரியத் துறை
விரல்நுனிக் கணையாழிச் செம்பவள மெனக்கொண்ட விடுபட விழையையம்
விரல்குவி வெண்குமுத நீள்பவழ முனையையம் விளங்கக் கைப்பற்ற
கரவிலாக் காரிகைத தரப்பிஞ்சு நீள்நகமே பவழமது
உரலிடி மருதாணிப் பூச்சால் செம்பவழ மெனமாறல் அறிகிலேனே
நானும் புரவிமீதமர்ந்து மெதுவாகச் சென்றுகொண்டிருந்த சமயத்தில் உப்பரிகைத்
தொங்கலில் குளித்து உடல்துவட்டி வந்து நின்ற நீண்ட மேகம்போன்றக் கூந்தலை
அல்லிக் குமுதக் கரத்தின் விரல்களினால் கோதிப் பிரித்தனள் தன் ஈரக்கூந்தலை
என்ன ஆச்சரியம் அவளின் விரல் நுனிகளில் நீளச் செம்பவழம் மோதிரம் மின்னக் கண்டதும் என்னையே யது வியப்பிலாழ்த்தியது விரல் நுனியில் அத்தனை செம்பவழக் கணையாழிஅணிவது சாத்தியக் கூறல்லவ் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.
எப்படியோ அவளும் எனனைக்கண்டு காதலிக்க முதல் நாளன்றே சோதித்தேன். அவளுக்கு அடர்த்தியான நீண்ட கூந்தல் அலைபாயக் கண்டேன். கையைப் பற்றி இழுத்து அமரச்செய்து ஆராய்ந்தேன். அவளின் ஒவ்வொரு விரல் நகங்களும் நீள் சதுரமாக செம்பவழ மோதிரக் கல்லாக ஜொலித்தது.இந்த அழகை யாரிடமும் கண்பதரிது. என்று நானே மகிழ்ச்சி கொண்டேன்.