அவிழ்க்க முடியாத முடிச்சு 2 🎻

அவிழ்க்க முடியாத முடிச்சு-2
...............................................

ஐ லவ் யூ
என்றாள்,
ஏதோ
'அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்'
என்பது
போல...

என்னதான்
ரொம்ப நாளா
காதலிச்சுக்கிட்டு
இருந்தாலும்,

கொஞ்சமாவது
வெட்கப்பட்டு,
லவ் யூ சொல்லுடி
என்றேன்.

அய்ய...
எனக்கு வெட்கம்லாம்
செட் ஆகாதுப்பா
என்றாள்.
(கலாய்க்கிறாளாம்...)

ஏற்கனவே
நான் சொன்னதுதான்,
மறுபடியும்
சொல்கிறேன்,

'அவிழ்க்கவே
முடியாத முடிச்சை
அவிழ்ப்பது
சுவாரஸ்யம்,
அப்படி
ஒரு முடிச்சைப் போடுவது
அதைவிட
சுவாரஸ்யம்.'

"உனக்கு வெட்கம்லாம்
செட் ஆகாது.
நான் மட்டும் தான்
செட் ஆவேன்."
என்றேன்
கேலியாக.

சிக்கனமாக,
அழகாக
மூன்றே எழுத்துக்களில்
வெட்கப்பட்டாள்...

"ச்சீய்..."

.

#கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (8-Nov-21, 1:49 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 157

மேலே