அவள்

உதய காலம்......
மழைக்கால மேகம் மறைக்க
காணாது போன கதிரவன்
கதிரோன் ஸ்பரிசம் படாது
மலர்ந்தும் மலரா தாமரைப்பூ

மன்னவன் வருகைக்கு காத்திருந்த
கன்னியவள் முகம் வாடியதே
இன்னும் அவன் வாராது போக
அத்தாமரைப் பூப்போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Nov-21, 1:44 pm)
Tanglish : aval
பார்வை : 163

மேலே