விரும்புகிறேன்
நிலவே!
உன் அழகை காண
உன் அருகில்
மேகமாக இருக்க விரும்புகிறேன்.
மலரே!
உன் அழகை காண
உன் அருகில்
இலையாய் இருக்க விரும்புகிறேன்.
இரவே!
உன் அழகை காண
உன் அருகில்
நட்சத்திரமாய் இருக்க விரும்புகிறேன்.
கண்ணே!
உன் அழகை காண
உன் அருகில்
இமையாய் இருக்க விரும்புகிறேன்.
அழகே!
உன் அழகை காண
உன் அருகில்
காதலனாக இருக்க விரும்புகிறேன்.