எப்படிங்க வெளியே வர முடியும்

வெளியே கிளம்பவே பயமாக இருக்குது ஐயா
ஜனவரியில் வெளியே வந்தால் புத்தாண்டு மழை அடிச்சு தாக்குதல்

மார்ச் மாதம் வெளியே வந்தால் பரீட்சைகள் பார்த்து முழிக்குது

மே மாதம் வெளியே வந்தால், மவனே, கத்தரி வெயில் அடிச்சு துரத்துது

ஜுலை மாதம் வெளியே வந்தால் ஆடிக்காத்து தூக்கி அடிக்குது

செப்டம்பர் மாதம் வெளியே வந்தா மக்கள் கூட்டம் கூட்டமா அலை மோதுது

நவம்பர் மாதம் வெளியே வந்தால் மழையோ இடியோ வந்து பயமுறுத்துது

சரி போகட்டும், மற்ற மாதங்களில் வெளியே புறப்பட்டால் நாய், நரி, பாம்பு, சிறுத்தை போன்ற இரண்டு கால் ஜந்துக்கள் ஆசை காட்டி மோசடி செய்யுது

இந்த பன்னிரண்டு மாதங்களையும் தவிர்த்து மற்ற நாட்களில் வெளியே வரலாம்னு பார்த்தா எவனோ ஏவிவிட்ட கரோனா காட்டேரி, நவராத்திரி சிவாஜி போல பல வேடங்களில் நம்மை பயமுறுத்தி உயிரை பறிக்குது...

அப்புறம் எப்படிங்க வெளியே வர முடியும்?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (30-Nov-21, 4:04 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 49

மேலே