போரில் கருணை காட்ட சாவான் பாரு
நேரிசை வெண்பா
ஒல்பகை ஓடவொரு போதும் விடோம்நன்னக்
கல்சிலை வேண்டுமாயின் மன்னிக்கும் --- கொல்வதில்
முந்தப் பிழைப்பன் உறுதி அவனுயிரும்
பிந்தியவன் சாவனாம் இங்கு
எல்லையில் கருணையின்றிக் கொல்வோம். தாமதித்தால் நம்மையவன்
கொல்வதுறுதி? கோயிலில் உள்ளக் கடினமான நன்னக் கல்லில் செய்த
கடவுள் கற்சிலை முன் அழ அது உயிர்பிச்சை கொடுக்கும். நாங்கள் தயங்காக்
கொல்வோம். நான் பிந்த அவன் என்னைச் சுடுவன். அதனால் அவன் சுடுமுன்
நானவனைச் சுட்டு வீழ்த்தி சாகடிப்பேன்