காதலர் சிரிப்பு

அவன்: மாலா இந்த ரோஜா பூ உன்னை பார்க்கும்போது அவ்வளவு அழகாக இல்லை.
அவள்: ஏன் நான் அவ்வளவு அழகா?
அவன்: இல்லை இல்லை உன்னை பார்க்கையில் இந்த ரோஜா பூ மிகவும் அழகாக இருக்கிறது .

அவள்: காலம் முழுவதும் இப்படியே கடற்கரையில் இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்.
அவன்: இனிமை எங்கு இருக்கும். உடம்பெல்லாம் ஒரே உப்பாக கரிக்கும்.

காதலன்: உன்னை தான் முதன்முதலாக காதலிக்கிறேன்
காதலி: என்னுடைய மாஜி காதலர்களும் இப்படியே தான் சொன்னார்கள்.

காதலி: நீங்கள் ஒருவர் மட்டும் இருந்தால் போதும், எனக்கு வாழ்க்கையில் வேறு எதுவுமே தேவையில்லை.
காதலன்: எனக்கு அப்படியெல்லாம் இல்லை. நீயும் வேண்டும் உணவும் வேண்டும் உடையும் வேண்டும் வீடும் வேண்டும் வசதியும் வேண்டும்.

காதலி: நாளை என் வீட்டுக்கு வாருங்கள். வந்து என்னை பெண் கேளுங்கள். பின் கூட்டி செல்லுங்கள்.
காதலன்: வீட்டில் அப்பா அம்மா இருப்பார்களா?
காதலி: இருவரும் இப்போது இல்லை. நான் மட்டும் தான் இருப்பேன்

காதலி: இப்போது நீங்கள் வாங்கி கொடுத்திருப்பது எனக்கு 20 ஆவது ஸ்மார்ட் போன்.
காதலன்: ஏன் உங்கள் வீட்டில் ஒவ்வொருவரும் உனக்கு ஒரு போன் வாங்கி கொடுத்தார்களா?
காதலி: இல்லை இல்லை. என்னை காதலிக்கும் ஒவ்வொருவரும் ஒரு புதிய ஸ்மார்ட் போன் வாங்கி தருவார்கள்.

காதலன் : என்னிடம் அழகு இல்லையா , அந்தஸ்து இல்லையா , வேறு என்ன என்னிடத்தில் எதிர்பார்க்கிறாய்?
காதலி: நீங்கள் வாட்சப்பில் இல்லை, பேஸ் புக்கில் இல்லை, இன்ஸ்டாகிராமில் இல்லை. பின்னே எப்படி நீங்கள் என்னுடன் காதல் சேட் செய்வீர்கள்?


காதலி: தேனிலவுக்கு என்னை எங்கு கூட்டிக்கொண்டு போவீர்கள்?
காதலன்: என்னுடைய பட்ஜெட் 10000 ரூபாய். இதற்குள் நீ எங்கெல்லாம் போகவேண்டும் என்று ஆசையோ அங்கெல்லாம் சென்று வரலாம்.
காதலி: எனக்கு இப்போது உங்களுடன் தேனிலவு ஆசையே இல்லை.
காதலன்: ஏன் என்ன பிரச்சினை ?
காதலி: இன்னொருத்தர் 25000 வரை தேனிலவுக்கு செலவு செய்ய தயாராக இருக்கிறார்.

ஜோசியர்: இந்த காதலில் உனக்கு வெற்றி நிச்சயம்.
இவன்: அப்படி என்றால் எங்கள் திருமணம் எப்போது நடக்கும்?
ஜோசியர்: உங்கள் திருமண அழைப்பிதழில் குறிப்பிடும் நேரத்தில் நடக்கும்.

காதலி: திருமணத்திற்கு பின் உங்களுக்கு என்னையே தருவேன். நீங்கள் என்ன தருவீர்கள்?
காதலன்: என்னில் பாதியை உனக்கு தருவேன்.
காதலி: மீதி?
காதலன்: மீதி என்பது உந்தன் ஒரு பாதி.

காதலி : என்ன நம் கல்யாணத்திற்கு ஒரு நாள் கூட லீவு எடுக்க மாட்டீர்களா?
காதலன்: இப்போதெல்லாம் வீட்டிலிருந்து தான் அலுவலக வேலைகளை பார்க்கிறேன். லீவு எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.


ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (19-Jan-22, 3:59 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : kathalar sirippu
பார்வை : 152

மேலே