சூரியனுக்கு வந்த சந்தேகம்
சுடர் ஒளி சூரியனுக்கு வந்தது சந்தேகமாம்;
படர் ஒளி வீசியும்,
சுத்தும் பூமிக்கு சுகம்தான் இல்லையோ என்ற
குழப்பம்தான்.
சோகத்தில் தான் கதிரவன்;
எட்டி எட்டி பார்த்தாலும்,
எழுச்சியுடன் முயற்சித்தாலும்;
விடியல் புவியில் உதிக்கவில்லையாம்.
விடைதெரியாத கலக்கம் தான்;
இருட்டிகிடப்பதோ புவி,
இருண்டகண்டமானதோ,
மருண்டுதான் போனது சூரியன்;
வேறு கிரகணத்துக்காரன் வந்து
புவியை ஊடுருவல்
(ஹேக்கிங்)
செய்துவிட்டானோ,
என்ற தயக்கம் தான்;
இல்லை இறைவன்தான் படைப்பின் விசித்திரத்தை, மாற்றிவிட்டானோ என்ற குழப்பம்தான்.
கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்
புவியைப்பார்த்து இரக்கம் கொண்டதாம் சூரியன்.
தலைகுணிந்து பார்த்த ஆதவனுக்கு,
ஒரே தலை சுத்தல்;
கிறு கிறு மயக்கம்;
கீழ்வானம் இன்னும் சிவக்கவில்லை,
சினமும் தான்.
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சென்று,
இறைவனிடம் என்ன குழப்பம் என்றான்;
இது குழப்பம் இல்லை,
இது குழப்படி என்னான் இறைவன்.
மனிதன் செய்த குழப்படி என்றார் இறைவன்,
மனதில் இருக்கும் அழுக்கை, அகந்தையை எரிக்காது;
குப்பையை எரிப்பதாலும்; வாகனப்புகையாலும்,
தொழிற்சாலைகள் விடும் புகையாலும்,
எடுக்கும் புகை மூட்டம் தான்;
இருமலுக்கு மேல் இருமல்;
நானே எட்டிப்பாக்க பயந்து,
எமர்ஜன்ஸி டிக்லர் செய்து,
எமலோகம் தேடிப்போகலாம்
என்றுள்ளேன் என்றார் இறைவன்.
புலோகம் புறப்பட்டு வந்தான் கதிரவன்;
எதிர்வந்த மனிதனிடம், எரிப்பது ஏன் என்று கேட்டார்;
எரிப்பது எங்கள் பொழுது போக்கு,
எரித்தே வாழ்வது எங்கள் வாழ்வியலின் சாதனை என்றான்.
விசித்திர மனிதனை, நினைத்து சிரித்துக்கொண்டே;
ஆக்ஸிஜன் இயந்திரம் வாடகைக்கு வாங்கி பொருத்தியதும் மட்டுமல்லாது;
பூவியை வென்டிலேட்டர் இந்திரத்தில் படுக்கவைத்து
விட்டு,
பட பட வென்றே புறப்பட்டு ஓடிவிட்டான் உதயனன்.
நாளையாவது நலத்துடன் விடியும் விடியல் என்று
தனது காலைவணக்கத்தை புவிக்கு கூறிச் சென்றான்.
அன்புள்ளங்களுக்கு அன்பனின்
அதிகாலை வணக்கம்
அ. முத்துவேழப்பன்