அத்தை மகனே வா
அத்தை மகனே வா ...ஆசைகொண்ட எனையே அள்ளிக்கொண்டு போ
என்உச்சந்தலை வகிடாக வந்துவிடு...
யென்அச்சமெல்லாம் நீக்கிவிடு ...
குழல்தனிலே மணம்வீசும்
மலராக மாறிவிடு
யென்மயக்கம் தனையேபோக்கிவிடு
அளவுநெற்றியில் அழகுபொட்டு ஆக
அமர்ந்துவிடு ...
யெனைஆள அரசனாக வந்துவிடு
கண்ணில் தீட்டும் மை என
தீண்டிவிடு எனையே... உனை காணும் விழியின் காவலானாய் காத்துவிடு துணையே
உதட்டில் ஒட்டிக்கொண்ட சாயம்
போல் ஒட்டிவிடு...
உள்ளத்தை கட்டிகொண்ட உசுரும்
போல் தங்கிவிடு ...
காதில் தொங்கும் காதணியாக
தொங்கிவிடு...
காதல்கொண்ட எனக்கு கணவன்
ஆக வந்துவிடு....
கழுத்தில் சூடிய கருகமணி ஆக
சூழ்ந்துவிடு ....
யென்அங்கம் தழுவிடும் தங்கமும்
ஆக மாறிவிடு
கைகளில் மாட்டிய வளையல் ஆக
வளைத்துவிடு எனையே...
அதில் துள்ளிடும் ஓசையாக
ஒலித்துவிடு துணையே....
இறுக கட்டிய சேலையாக வந்துவிடுஅதில்
செருகி நிற்கும் முந்தியில் பந்தியாக
தங்கிவிடு இணையே....
காலின் கொலுசாக பூட்டினேன்
உனையே .... அதிலே
காவல் கொளும் ஓசையாக நீதான்
துணையே....
விரலில் கொஞ்சிடும் மிஞ்சியாக
மாறிவிடு ...
எனை விஞ்சியே .....
நீயென்மெட்டியின் வட்டி ஆகும் நாள் என்றோ .....
அவ்வோசைக்கும் ஓர் நாளை சொல்லிவிடு ...
அத்தகவலை ஊர் அறிய கூறிவிடு யென் மாமனே ....
அத்தைக்கு பிறந்தவனே....
எனை ஆளப்பிறந்தவனே....
வந்துவிடு ...ஓர்நல்நாளை
தந்துவிடு ...