காதல் காமம் பெரிது எது
காதல் என்பது நற்பண்பின் துவக்கம்
அப்பண்பின் அடையாளம் அன்பு
அன்புவழி நற்செயல் காதல் அவ்
அன்பின் ஆழமே காமம் ...
காம அளவு துவக்கம் முத்தம்
காதல் கொளும் உயிரிக்கு தேவை
இது நித்தம்
இதில் பெரிது எது சிறிது எது ?
காதலும் காமமும் என்பது
ஆணும் பெண்ணும் போல இவை இரண்டும் தனித்து இருக்கல் ஆகாது
தனித்திருப்பின் பெருமை அங்கே
சேராது
அப்பெருமைதான் மழலைஎனும்
மாசற்றசெல்வம்
இதுதான் காதலின் விதிமுறை
மதிதான் வாழ்வின் வரைமுறை
ஆயினும் காதலுக்குமுன் காமம் உயிரினத்திற்கு ஆகாது...
இதனை அறிந்தமனங்கள் திருமணம் கண்டே ஒன்று கூடும்
வாழிய காதல் வாழிய காமம்
வையகத்தில் வாழ்வாங்கு
பெற்றோர் உற்றோர்
துணைகொண்டு
இதன்இணை யென எதுவென்று....