ஆரினை சூடிய அரனின்

கலிவிருத்தம்

மண்ணைப் போன்றுச் சகித்துக் கொள்ளும்
எண்ணங் கொண்ட மனிதர் சிலரின்
பண்பால் உலகின் வெம்மை விலகி
தண்மை மிகுந்தே அன்பு கூடுமே (க)

இறைவன் என்றுமே குறையை தராமல்
நிறைவையும் தெளிவையும் தந்தே நம்முள்
அறத்தையும் கொடையையும் ஏற்பையும் பார்க்கவே
உறுதியாய் கருமமாய் நின்றபடி காத்தே (உ)

உள்ளம் பதப்பட உலகின் எதையும்
உள்ளுக் குள்ளே அறிந்து ஏற்றே
கள்ள எண்ணத் தையுமே களைந்தால்
தெள்ளத் தெளிவாய் எண்ணம் தெளியுமே. (ங)

வேரினை நம்பியே மரங்களின் வாழ்வுமே
காரினை பார்த்தே உலகின் உயிர்கள்
ஆரினை சூடிய அரனின் அருளால்
பாரினுள் பிறந்த யாவுமே மென்மையாய் (ச)

உடையுடன் மிதியடி பொன்நகை ஒப்பனை
தடையினை அகற்றும் காரணிப் போன்று
வடிவினைப் பெற்றே இன்று எங்குமே
முடிவில் எல்லாம் பகட்டை காட்டவே. (ரு)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Feb-22, 9:18 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 30

மேலே