வாழ்க்கை ரகசியம்
மனிதனின் வாழ்க்கை என்பது
ரகசியங்கள்
நிறைந்த ஓர் குகை...!!
குகையில் புதைந்து கிடக்கும்
ரகசியங்களை அறிந்துகொள்ள
முயற்சி செய்யாதே ...!!
வாழ்க்கையின் ரகசியங்களை
தேடி தேடித்தான்
மனிதன் மதியிழந்து
தன் நிம்மதியை இழந்து
தவிக்கின்றான்...!!
மனிதா தேடுவதை நிறுத்து
எதிர்பார்ப்புகள் இல்லாத
வாழ்க்கையை வாழு...!!
வாழ்க்கை பாதையில்
வருவதை ஏற்றுக்கொண்டு
வாழ பழகிக்கொண்டால்
துன்பங்கள் உன்னைவிட்டு
விலகி ஓடும்
நிம்மதி மட்டுமே
உன்னிடம் இருக்கும் ..!!
வாழ்க்கையின் ரகசியங்கள்
என்றும்
ரகசியமாகவே இருக்கட்டும்
அப்போதுதான்
வாழ்க்கை
சுவாரசியமாக இருக்கும் ...!!
--கோவை சுபா