நான் என்பது..!!
நான் என்பது நான் இல்லை
என் உயிர் நான் இல்லை
என் உடம்பு நான் இல்லை
என் செயல் முடிவு செய்கிறது
நான் யார் என்பதை..!!
உயிர் மேலவும்
உடம்பு கிலேவும்
போகிறது நான் செய்த
செயல் மட்டும் இங்கே
பரவ துடிக்கிறது..!!
ஒருவருக்கு நீ செய்வது
சரி என்றால் மற்றொருவருக்கு
கண்டிப்பாக தவறு தான்
அது உன் தவறு அல்ல
உலக வழக்கம்..!!
உனக்கு எதிர் நிற்பவன்
அவனுக்கு இடது என்றால்
உனக்கு வலது தான் இதில்
யார் சொல்வது சரி..!!
எதையும் துணிந்து முடிவு எடு
உன்னை வெல்ல எவரும் இல்லை
நீ என்பது நீ மட்டும் தான்..!!